Latest News

April 18, 2015

தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது
by admin - 0

தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.பரவலான விழிப்புணர்வு ஒன்றை தாக்கவன்மைமிக்க ஊடகத்தில் மேற்கொள்ளல், தமிழர்கள் சிதைக்கப்படும் கதையை நிகழ்கணத்தில் பதிவாக்கல், இதை அந்தப் பகுதியிலேயே, எந்தவித அரசியலும், அரசியல் தலையீடும் இன்றி மேற்கொள்ளல் ஆகிய கருப்பொருளை முன்னிறுத்தி யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையில் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது....
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya


சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வினில் வயது வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள்,கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அறிமுக உரையினை ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரனும் வெளியீட்டு உரையினை நெறியாளர் ஜெராவும் ஆற்றியிருந்தனர்.

பரப்புரைகளை மருத்துவர்கள் முரளி வல்லிபுரநாதன்,குமரேந்திரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர். சிறப்பு பிரதியினை கதிரமலை சிவன் கோவில் பிரதம குரு வெளியிட்டு வைக்க பாதிக்கப்பட்ட மக்களிற்காக சளைக்காது போராடிவரும் மருத்துவர் செந்தூரன் பெற்றுக்கொண்டார்.

தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் வெளியீட்டு நிகழ்விற்கான முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. 
« PREV
NEXT »

No comments