Latest News

April 18, 2015

மட்டக்களப்பு யுவதிக்கு அடுத்தவாரம் விடுதலை
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்ட மட்­டக்­க­ளப்பை சேர்ந்த உத­ய­சிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­ப­டுவார் என ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­ லாளர் ஷிரால் லக்­தி­லக தெரி­வித்தார். நீண்ட நாள் விடு­முறை கார­ண­மாக ஜனா­தி­ப­தியின்விடு­த­லைக்­கான கடிதம் சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­திற்கு அனுப்ப தாம­த­மா­கி­ய­த­னா­லேயே விடு­தலை தாம­த­மா­ன­தென்றும் அவர் தெரி­வித்தார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் சீகி­ரி­யா­விற்கு சுற்­றுலா பய­ணத்தை மேற்­கொண்ட மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியை சேர்ந்த யுவதி உத­ய­சிறி சீகி­ரிய சிற்­பங்­களில் கிறுக்­கி­யதால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் சிறையில் அடைக்­கப்­பட்டார்.

மிகவும் வறு­மை­யான குடும்­பத்தை சேர்ந்த இந்த யுவதி அறி­யாமல் செய்த தவறை மன்­னித்து விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென அவ­ரது பெற்றோர்
மற்றும் தன்­னார்வ நிறு­வ­னத்­தினர் ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர். பாரா­ளு­மன்­றத்­திலும் இவ்­வி­டயம் பேசப்­பட்­டது. இதற்­க­மைய இந்த யுவ­திக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கினார். அதற்­கான கடி­தத்­திலும் கையெ­ழுத்­திட்டார்.

ஆனால் அக் கடிதம் சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­திற்கு கிடைக்­கா­ததால் உத­ய­சி­றியின் விடு­தலை தாம­த­மா­னது.

ஜனா­தி­ப­தியின் கடிதம் விடு­மு­றைகள் கார­ண­மாக தாம­த­மா­கி­ய­தா­லேயே இந்­நிலை ஏற்­பட்­ட­தென்றும் திங்­கட்­கி­ழமை ஜனாதிபதியின் கடிதம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் பின்னர் உதயசிறி விடுதலை செய்யப்படுவாரென்றும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரான ஷிரால் லக்திலக தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments