வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணி கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் மக்களுக்குத் தேவையான வீதிகளை இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் மக்கள் மீளக் குடியேறினாலும் கூட போக்குவரத்து செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஏனைய அரச ஊழியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் தமது எல்லைகளை நகர்த்தி புதிய எல்லைகளை அமைக்கும்போது தமக்கு ஏற்றவாறு எல்லைகளை போட்டு வருகின்றார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இது முழுமையாக விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதியிலும் கூட இரண்டு பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் சுமார் நூறு ஏக்கர் பரப்பில் உள்ளதுடன் இரண்டு முகாம்களும் காணப்படுகின்றன. இதனையும் உள்ளடக்கியே காணிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஆகவே, அந்த முகாம்கள் அகற்றப்பட்டால் தான் இந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியேற முடியும். குறிப்பாக இந்த காணிகளின் உரிமையாளர்கள் உரும்பிராய் கோப்பாய் பகுதிகளில உள்ள தற்காலிக முகாம்களில் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் இங்கு வந்து மீளக் குடியேற வேண்டுமாக இருந்தால் இந்தப் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அந்த மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட பகுதியையும் உள்ளடக்கியே உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்றும் கூட இராணுவத்தினர் தமது எல்லைகளை நகர்த்தி புதிய எல்லைகளை அமைக்கும்போது தமக்கு ஏற்றவாறு எல்லைகளை போட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக இந்த எல்லை வேலிகள் போடும் விடயத்தில் இராணுவம் தமது விருப்பத்திற்கு ஏற்ப வேலிகளை அமைப்பதினால் மக்கள் உரிய முறையில் குடியேற முடியாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக காணிகள் விடப்படும் போது மலசலகூடம் மக்களிடமும் வீடுகள் உயர் பாதுகாப்பு வலயத்திலும் இருக்கின்ற வகையிலும் தோட்டங்கள் இராணுவ முகாம்களுக்குள்ளும் வீடுகள் வெளியிலும் இருக்கும் வகையிலும் காணிகளின் வேலிகளை இராணுவம் அமைத்து வருகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளை இராணுவம் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட வருகின்றது. இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சரும் ஏனைய உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
உரிய முறையில் காணிகள் விடுவிக்கப்படு கின்றனவா? என்பது தொடர்பில் அரச அலுவலர்களும் மீள்குடியேற்ற அமைச்ச ரும் கவனம் செலுத்த வேண்டியது அவசிய மாகும். இதனைவிடுத்து ஆயிரம் ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்தவகையான பிரயோசனமும் இல்லை என்றார்.
No comments
Post a Comment