மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன கீழ்பிரிவு தோட்டத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன 17வயது மதிக்கத்தக்க பழனிசாமி சரோஜினி என்ற சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை காலை ஹப்புகஸ்தென்ன ஊக்கிரி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சிறுமி வீட்டைவிட்டு வெளி யேறியிருந்தமை விசாரணைக ளில் இருந்து தெரிய வந்துள் ளது
மரண விசாரணைகள் திடீர் மரண விசாரணையாளர் நரசிம்ம பெருமாள் தலைமையில் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment