பாராளுமன்றம் கலைக்கப்படும் எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடாத்த முடியுமான வகையில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது பழைய முறையிலா? அல்லது புதிய தேர்தல் முறையிலா என்பதை அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும் எனவும் எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்த செயலகம் தயாராகவுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுவதாயின் மாத்திரம் ஒரு குறுகிய காலம் மேலதிகமாக தேவைப்படும். இக்காலப் பகுதியில் காரியாலய ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளதுடன், பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. இது குறித்து அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment