Latest News

April 18, 2015

யாழினில் முன்னாள் முதல்வர் வரதர்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மீண்டும் யாழ்.திரும்பியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்து உரையாடியிருந்தார்.ஈபிடிபி அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களான இரா.சிவச்சந்திரன்,சுந்தரம் டிவகலாலா ஏற்பாட்டினில் இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள ‘ஆறுதல்’ அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் ‘முதலமைச்சராக எனது அனுபவம்’ என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார்.

பின்னர் ஆனந்த சங்கரியையும் அவர் சந்திக்கின்றார்.இந்திய அரசின் ஏற்பாட்டினில் வருகை தந்திருக்கும் அவர் யாழிலுள்ள துணை தூதுவராலயத்தினில் இரகசிய சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார்.

கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய கூட்டு ஒன்றை தோற்றுவிப்பதில் அவர் ஆர்வம் காட்டிவருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
« PREV
NEXT »

No comments