Latest News

April 15, 2015

டொரிங்டன் தோட்ட ஆற்றிலிருந்து பொது மக்களால் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
by admin - 0

டொரிங்டன் தோட்ட ஆற்றிலிருந்து பொது மக்களால் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 சடலம்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்ட ஆற்றிலிருந்து பொது மக்களால் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா்  3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய பழனி சுப்பிரமணியம் என தெரியவந்துள்ளது.
இவா்  நேற்றுக்காலையில் வீட்டிலிருந்து உடுதுணி கழுவுவதற்காகவும் தனது பிள்ளைகளை நீராட்டுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார் என உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.
அத்தோடு பிள்ளைகள் நீராடிய பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
அதன் பின் குறித்த நபர் நீராடிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
குறித்த சடலம் பொது மக்களால் மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
« PREV
NEXT »

No comments