Latest News

April 15, 2015

டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினம் இன்று
by admin - 0

மூழ்கவே முடியாது என கருதப்பட்ட உயர் தொழில் நுட்பங்களைக் கொண்டு கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆடம்பர பயணிகள் நீராவிக் கப்பலான ஆர்.எம்.எஸ் டைட்டானிக், வட அட்லாண்டிக் கடலில் முதல் பயணத்திலேயே மூழ்கிய தினம் (ஏப்ரல்-15)இன்று.

டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் எனும் இடத்தில் ஆடம்பர வசதிகளுடன் கட்டப்பட்டது. இக்கப்பல் தனது முதல் பயணத்தை 1912-ஆம் ஆண்டு ஏப்ரல்-10-ஆம் நாளில் கப்பல் கேப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டின் செர்போர்க் மற்றும் அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் பயணிகளை சுமந்து கொண்டு வட அட்லாண்டிக் கடலில் சென்றது. பத்து தளங்களைக் கொண்ட இக்கப்பலில் மொத்தமாக 2200 பயணிகள் பயணித்தனர்.
ஏப்ரல் 15-ஆம் நாள் இரவு 11.40 க்கு வழியில் இருந்த பனிப்பாறையுடன் மோதாமல் தவிர்ப்பதற்கு பெருமுயற்சி செய்தும் பலனளிக்காமல் பனிப்பாறையுடன் மோதி கப்பல் இரண்டாக உடைந்தது. இரவு 2.40 மணியளவில் கப்பலின் அனைத்து பகுதிகளும் கடலில் மூழ்கியது. கப்பலில் உயிர்காக்கும் படகுகள் மற்றும் மீட்பு படகுகளின் மூலமாக 706 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

மீதம் 1500-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் கடல் பனியின் குளிர்ச்சி காரணமாக உயிரிழந்தனர். இந்நிகழ்விற்க்குப்பின் 1913-ஆம் ஆண்டு நடந்த முதல் கடல் பயண பாதுகாப்பு மாநாட்டில் கப்பலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் உயிர்காக்கும் படகு வசதி மற்றும் கப்பல் ஊழியர்கள் அதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் வடஅட்லாண்டிக் கடல் பயண வழித்தடத்தில் பனிப்பாறைகளை கண்காணிக்க சர்வதேச ரோந்துக்கப்பல் குழுவை ஏற்படுத்துவது, ரேடியோ தோடர்பு மூலமாக 24 மணிநேரம் பயணக் கப்பல்களை தகவல் தொடர்பில் வைத்திருப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
« PREV
NEXT »

No comments