5 பிள்ளைகளின் தாய் உண்ணாவிரம் |
இராணுவம் ஆக்கிரத்து வைத்துள்ள காணியை விடுவிக்கக் கோரி 5 பிள்ளைகளின் தாய் உண்ணாவிரம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு.
கிளிநொச்சியை சேர்ந்த திருமதி இந்திரா யோகேந்திரன் அவர்கள் தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சாகுவரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்.
பரந்தன்சந்தியிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து இராணுவம் வெளியேற மறுத்துவரும் நிலையில் சம்பந்தப்டப்ட்ட அதிகாரிகளும் அசமந்தப் போக்கினை காட்டிவரும் நிலையில் விரக்தியடைந்துள்ள காணி உரிமையாளர் தனது காணிக்கு முன்பாக இன்று காலை 6.00மணியிலிருந்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டுள்ளனர்.
No comments
Post a Comment