Latest News

April 15, 2015

ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
by admin - 0

இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.

இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

« PREV
NEXT »

No comments