மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரே நாளில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.
கிரானை சேர்ந்த டினோரஞ்சி முத்துக்கிருஸ்ணன் என்ற தாய் மூன்று பிள்ளைகளையும் தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரன் என்ற பெண் மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளனர்.
இந்த சிசுக்கள் போதனா வைத்தியசாலையின் சிசுகள் விசேட சிகிச்சை பிரிவு,சிசுக்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா கடம்பநாதன் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த குழந்தைகளை பிரசவித்தவரில் ஒருவரான தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரனின் குடும்ப நிலைமை மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால் அவருக்கு உதவ பரோபகாரிகள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.
குறித்த தாயின் கணவரும் பாரிசவாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதனால் குறித்த தாய் மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு மிகுந்த கஸ்டத்தினை எதிர்நோக்கும் நிலையிருப்பதனால் அவருக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.
குறித்த பெண் மிகவும் வறுமையான நிலையில் இருப்பதாகவும் முடியுமானவர்கள்,புலம்பெயர்ந்த மக்கள் உதவ முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
உதவ விரும்புபவர்கள் மேகானந்தி சுதாகரன்,மேகலாதவர் வீதி,மைலம்பாவெளி,மட்டக்களப்பு என்னும் விலாசத்துக்கு சென்று நேரடியாகவோ அல்லது மேகானந்தி சிதம்பரப்பிள்ளை,இலங்கை வங்கியின் செங்கலடி கிளை,வங்கி கணக்கிலக்கம் 2930242 என்ற கணக்கிலக்கம் மூலமோ உதவ முடியும்.இது தொடர்பில் 0772894944 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளமுடியும்.
No comments
Post a Comment