துருக்கி ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட வேளையில் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இவரை கைது செய்ததாக கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு விமான நிலைய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் இந்நாட்டில் இருக்கின்ற இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 15 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விமான நிலையத்தில் வைத்து புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment