Latest News

April 17, 2015

மட்டக்களப்பில் இந்து பெண்ணை திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர்
by admin - 0

மட்டக்களப்பு   மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு கொடுவாமடு காளி கோயில் வீதி கிராமத்தில் வசிக்கும் சுதாகரன் சுதாராணி என்பவருக்கும் , பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல்  முபீன்  என்பவருக்கும்  கொடுவாமடு ஸ்ரீ களிகாமாடு விநாயகர் ஆலயத்தில் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் க . மோகன் தலைமையில் திருமணம் நடைபெற்றது .




குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு  பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார் .


இதுபற்றி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர்  செல்லம் மோகன்  கூறியதாவது ,
நமது  சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது . அதன் பிரகாரம்  அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது .

எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments