Latest News

April 17, 2015

சிறையில் நேதாஜி கொடூர சித்ரவதை செய்யப்பட்டார்? உக்ரைன் போடப் போடும் குண்டுகளால்அதிர்ச்சி
by admin - 0


newsjaffna,vivasaayi,newjaffna

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பான ஆவணங்களை உக்ரைன் வெளியிட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் ரஷ்யாவின் உளவு அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 லட்சம் ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. 1917ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரஷ்யாவின் கட்டாயத் தொழிலாளர் முகாம்கள் தொடர்பாக அந்நாட்டு உளவுத் துறைகள் அளித்த அறிக்கைகளும் அதில் அடங்கும். இந்த முகாமில்தான், இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் என்னும் படைப்பிரிவை உருவாக்கி போரிட்ட நேதாஜி, பிற போர்க் கைதிகள், அரசியல் அதிருப்தியாளர்களுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 


உளவாளி தந்த தகவல் சோவியத் குடியரசின் முன்னாள் உளவாளியும், இந்த முகாமில் பணியாற்றியவருமான குஸ்லோவ், யாகூட்ஸ்க் சிறையில் 45ஆம் எண் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் 1930ஆம் ஆண்டுகளில் சோவியத்தின் உளவாளியாக செயல்பட்ட குஸ்லோவ், நேதாஜியை நன்கு அறிந்தவர்.

சைபீரிய சிறையில்தான் நேதாஜி 


கொல்கத்தாவில் நேதாஜியை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதேபோல், சோவியத்தின் மற்றொரு உளவாளியும், சைபீரியா சிறைக் கைதியாக இருந்தவருமான கார்ல் லியோனார்டும், சைபீரியச் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினார்.



நிராகரித்த நேரு அரசு 


ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு அத்தகவலை நிராகரித்து விட்டது. அமெரிக்காவின் பொய்ப் பிரசாரம் அது என நேரு அரசு தெரிவித்து விட்டது.


உறுதி செய்த நேரு உதவியாளர் 


எனினும், இதுகுறித்து நேருவின் முன்னாள் உதவியாளரான டாக்டர் சத்ய நாராயண் சின்ஹா கூறுகையில், ஜெர்மனியில் இருந்து ஜெனரல் ஸ்டூவர்ட், மேஜர் வாரன் ஆகியோர் 1946ஆம் ஆண்டு அனுப்பிய குறிப்புகளில் நேதாஜி சாகவில்லை; அவர், ரஷ்யர்களாள் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்.


ஆவணங்களை வெளியிடும் உக்ரைன் 


ரஷ்யா உளவு அமைப்புகளிடம் இருந்த மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான முடிவு உக்ரைன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ரஷ்யாவின் அங்கமாக இருந்து பின் 1991ஆம் ஆண்டில் உக்ரைன் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் அனைத்தும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த ரகசிய ஆவணங்களை இணையதள வலைதளப் பக்கத்தில் வெளியிட உக்ரைன் அரசு திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிட்டால் சர்ச்சைக்குரிய முகாமில் இருந்த கைதிகள் குறித்தும், அவர்கள் மாயமானது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும். குறிப்பாக நேதாஜி தொடர்பான மர்ம முடிச்சுகள் விலகும்.

TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG,VIVASAAYI
WWW.VIVASAAYI.COM





« PREV
NEXT »

No comments