ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரை ஒரே மேடைக்கு கொண்டுவர முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹெரணையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிபாணியாது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்று தலைவர்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது இடம்பெறும் அநீதிகளுக்கு ஏதிராகவும் வீதியில் இறங்கவும் தமது குழு தயங்காது எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டார்.
Social Buttons