என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய் ராம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இந்த படத்தை வீரம் பட இயக்குனர் சிவா இயக்குகிறார்.
இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதி நடிப்பார் என கூறப்பட்டது. தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தற்போது புலி படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் ஸ்ருதி அடுத்து அஜித்துடன் ஜோடி சேர்கிறார். தெலுங்கில் அவர் மகேஷ்பாபுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
Social Buttons