வேலணை, அராலி சந்திக்கருகிலுள்ள காட்டுக்குள் இருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையைச் சேர்ந்த லான்ஸ்கோப்ரல் டபள்யூ.எஸ்.வீரசிங்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், அராலி சந்தி சோளவத்தையில் அமைந்துள்ள 11ஆவது 'கெமுனு வோச்' படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ சிப்பாயாவார்.
இதேவேளை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Social Buttons