Latest News

April 10, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைவிமர்சனம்!
by Unknown - 0


கிராமத்தில் இருக்கும் பல இளைஞர்களுக்கு பாரின் என்றால் சென்னை தான். எப்படியாவது சென்னை வந்து தன் வறுமையை வென்று வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவு.

இந்த கனவில் ஐடி, கார்ப்பரேட் துறையில் நுழைபவர்கள் எளிதில் தங்களை கனவை வென்று விடுகிறார்கள். ஆனால், சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று கங்கனம் கட்டி வரும் இளைஞர்கள், நல்ல வேலை இருந்தும் தவறான எண்ணத்தால் எப்படி சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்று அனைத்து விதமான பேச்சிலர்ஸ் வாழ்க்கையையும் படம் பிடித்து காட்டியுள்ளார் மருதுபாண்டி.

கதை

படத்தின் தொடக்கமே அப்துல் ரகுமான் கவிதையுடன் அழகாக சென்னை வீதியில் வலம் வருகிறது. இதை தொடர்ந்து பாபி சிம்ஹா, பிரபன்ஜெயன் ஆகியோர் தாங்கள் வசிக்கும் ரூமில் கலாட்டா செய்து, அங்கிருந்து நண்பன் லிங்கா ரூமிற்கு வருகின்றனர்.

லிங்கா நல்ல வேலையில் இருக்கிறார், இருந்தாலும் பெண்களிடம் தவறாக பேசி அவர்களை தன் இச்சையான ஆசைக்கு விருந்தாக்குகிறார். பாபி சிம்ஹா, பிரபன்ஜெயன் இருவரும் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று போராடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் கிராமத்து பெண்ணான சரண்யாவை ஆசை வார்த்தை காட்டி தன் வலையில் விழ வைக்கிறார் லிங்கா. சரண்யா நம்மை லிங்கா திருமணம் செய்து கொளவார் என நம்புகிறார். லிங்காவோ தன் ஆசை முடிந்தது அவரை கழட்டி விட, பின்பு தான் தெரிகிறது அவர் கர்ப்பமானார் என்று.

இந்த உண்மை தெரிந்து அவர் தப்பியோட, இறுதியில் பாபி சிம்ஹா, பிரபன்ஜெயன் தன் கனவில் வென்றார்களா? லிங்கா மீண்டும் சரண்யாவுடன் இணைந்தாரா? என்பதை உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மருதுப்பாண்டி.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்

பாபி சிம்ஹா செல்லப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார், அதேபோல தான் லிங்கா, பிரபன்ஜெயன் இருவருமே. சென்னையில் கஷ்டப்படும் இளைஞர்களை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சரண்யா கிராமத்து பெண்ணாக வெகுளியாக வந்து பின் லிங்காவிடம் ஏமாந்து செல்லும் இடத்தில் செம்ம ஸ்கோர் செய்கிறார். சென்னையில் இருட்டு வாழ்க்கையை அழகாக வெளிச்சம் போட்டி காட்டியுள்ளது வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு. படத்தின் பின்னணி இசையே இளைஞர்கள் படும் கஷ்டத்தை பாதி செல்கிறது. வெல்கம் கேமின்-ராஜா.

க்ளாப்ஸ்

சென்னை என்றாலே வெட்டு, குத்து, ஐடி துறை என்று காட்டி வந்த நேரத்தில் இப்படி ஒரு கதைக்களத்தை கையில் எடுத்ததற்காகவே மருதுபாண்டியை மனம் விட்டு பாராட்டலாம். அதிலும் குறிப்பாக பேச்சிலர்ஸ் ரூமில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இதை விட யாராலும் யதார்த்தமாக காட்ட முடியாது.

இன்றைய இளைஞர்கள் பெண்களிடம் எப்படி பேசுகிறார்கள் என்பதை காட்டிய விதம் மிக யதார்த்தம். பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கொடுத்ததில் எந்த தவறும் இல்லை, அப்படி ஒரு நடிகன், இந்த படத்திலும் செல்லப்பாண்டியாக கலக்கியிருக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் திருட்டு தனமாக வீட்டு ஓனருக்கு தெரியாமல் வீட்டிற்கு வரும் காட்சி பாபி நீ நடிகன்யா.

பல்ப்ஸ்

உண்மையான, ஒரு நேர்மையான படம் என்பதால் பல்பஸ் சொல்ல மனம் வரவில்லை இருந்தாலும், முதல் பாதியில் வரும் அந்த போன் Conversion பேமிலி ஆடியன்ஸை கொஞ்சம் உறுத்தும். மற்றபடி ஏதும் இல்லை.

மொத்தத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கும் போது, நீங்கள் கண்டிப்பாக சென்று வரலாம்.
« PREV
NEXT »