இந்திய சினிமாவில் நடிகைகள் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் காதல் தோல்வியாக தான் இருக்கும். இதேபோல் பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
23 வயதான திஷா கங்குலி என்ற அந்த நடிகை பெங்காலி டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிரபலமான கனகாஞ்சலி சீரியலில் நடித்து வந்த அவர், தெற்கு கொல்கத்தாவின் பர்னாஸ்ரீ பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தூங்கில் தொங்கினார் திஷா கங்குலி.
சுடிதார் துப்பட்டா மூலம் சுருக்குப் போட்டு கொண்டு உயிரிழந்து கிடந்ததாக போலிஸார் தெரிவித்தனர். ஆனால், தற்கொலைக்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை, போலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Social Buttons