தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் விஜய். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.
தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் படம் புலி. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாடலும் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.புலி படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் ஆந்திர வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
வரலாற்று படம் என்பதால் அங்கு பல லட்சம் செலவில் அந்தக் காலத்திற்கேற்றார் போல் ஒரு காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக தான் அமைக்கப்பட்டுள்ளதாம்.படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். எப்படியோ ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பமாகி விட்டது.
No comments
Post a Comment