இடம் - நடராஜா அரங்கு, கொட்டடி, பருத்தித்துறை
காலம் - 01.05.2015, வெள்ளிக்கிழமை
நேரம் - பி.ப 3.30 மணியளவில்
ஈழத்தமிழர்களின் எழுச்சியை உலகுக்கு வெளிப்படுத்த உழைப்பாளர் நாளில் அணிதிரள்வீர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன்..
ஈழத்தமிழ் இளயோர்களின் எழுச்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதனை முரசறைய அணிதிரள்வோம்..
உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் கிடைத்திட உரத்துக் குரல் எழுப்புவோம்..
தமிழ்த்தேசத்தில் அனைத்து துறைகளிலும் தமிழ்பேசும் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று முரசறைவோம்..
சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளினது வாழ்வுசிறக்க அவர்களையும் எம்மில் ஒருவராக ஏற்று, அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு சிறப்புபுரிமை அளிக்கவேண்டும் என்று இந்த உழைப்பாளர் நாளில் அறைகூவல் விடுப்போம்..
பைந்தமிழ் இனத்தீரே...!
இனத்துக்காக கொள்கைகளை விட்டுக்கொடாது தமிழர் தாயகத்தில் நின்றவாறு உரிமை முழக்கம் எழுப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்த முன்வாருங்கள்..
வடக்கு, கிழக்கு ஈழத்தமிழர்களின் தாயகம் என்பதை சொல்லளவில் அல்லாது செயல்வடிவில் (பிரிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை புறக்கணித்தமை) காட்டிநிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்துவோம்..
ஈழத்தமிழ் மக்களின் உளக்கிடக்கையை ஐநா பெருமன்றத்தில் ஆணித்தரமாக "ஈழத்தில் நடாத்தப்பட்டது, நடாத்தப்பட்டுக் கொண்டு இருப்பது எல்லாமே ஒரு திட்டமிட்ட இனவழிப்பு" வலியுறுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கரங்களைப் பலப்படுத்துவோம்..
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் முதன்மையான கோரிக்கையான "சுயநிர்ணய உரிமை" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை இன்றுவரை எந்த இடத்திலும் விட்டுக்கொடாது செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை வலுபடுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை என்று உணர்வோம்..
தமிழ்த்தேசத்துக்கான அங்கீகாரத்தை கோரிநிற்கும் ஒரே கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்துவோம்..
இன்று மக்கள் ஒற்றுமையாக சிந்திக்காவிட்டால்,
நாளை தனியாய்த்தான் தெருவில் திரியவேண்டிய நிலைவரலாம்!
உழைக்கும் உறவுகளே எழுந்து வாருங்கள் இது உங்கள் நாள்..
இது மாற்றத்துக்கான நேரம்!!!
"மக்கள் திரட்சிதான்,
மாற்றத்திற்கான புரட்சி"
உழைக்கும் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
1 comment
"அதிதி உரை" என்பது தமிழ் அல்ல. எனவே அதனை "விருந்தினர் உரை" எனத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்.
Post a Comment