பிரித்தானி சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16 வது உலக சைவ மாநாடு மாநாடு "பெரியபுராணமும் சைவ வாழ்வியலும் " 18.04.2015 சனிக்கிழமை Woodbridge High School, IG8 7DQ லும், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை Alperton Community School, HA0 4JE லும் இரண்டு நாள் மாநாடு காலை 9.00 மணி முதல் இரவு 10 மணி வரை இலண்டனில் வெகு சிறப்பாக நடைபெற்றது சைவத் திருக்கோயில்களின் ஒன்றிய தலைவர் மு.கோபாலகிருஷ்ணனன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கூனம்பட்டி ஆதினம் வணக்கத்திற்குரிய ராஜலிங்கம் மாணிக்கசுவாமிகளின் ஆசியுரையினை வழங்கியிருந்தார் .
இம்மாநாட்டில் பெரிய புராணமும் சைவ வாழ்வியலும் என்ற தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்து நாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன், மலேசிய சைவ சமய பேரவை செயலாளர் கலாநிதி அன்பரசன் அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் சின்னத்துரை தனபால சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தனர் .சிறப்பு நிகழ்வாக இசையமைப்பாளர் கங்கைஅமரன் அவர்களின் இசையுடன் கலந்த பேச்சு இடம்பெற்றது.
கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன கலந்து கொண்டிருந்தார்
பக்தியிசையினை பத்மஸ்ரீ நித்தியசிறி குழுவினர் வழங்கியிருந்தனர் பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் மாணவர்களின் பாட்டு, நடனம், நாடகம், வாத்திய, இசை என பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன
இம்மாநாட்டில் சிவஞானசுந்தரம் தம்பு,க.சிவகுருநாதபிள்ளை,ந.சுந்தரலிங்கம்,தா.உதயகுமார்,சி.ஆனந்தகுமார் ஆகியோர் ஆற்றி வரும் சமய சமூக பணிகளை கௌரவிக்குமுகமாக சமூக சீலர் எனும் பட்டத்தினை கூனம்பட்டி ஆதினம் வணக்கத்திற்குரிய ராஜலிங்கம் மாணிக்க சுவாமிகள் வழங்கி கௌரவித்தனர் நிகழ்ச்சிகளை சிவபாதம் கணேஷ் குமார் தொகுத்து வழங்கியிருந்தார்
No comments
Post a Comment