Latest News

April 11, 2015

வவுனியாவில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம்!!
by admin - 0

வவுனியா, நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம்(09.04) கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன் கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதோடு, குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.




மேலும் மாணவனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கல்விச்சமுகத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்வதோடு, இன்னுமொரு மாணவனுக்கு இவ்வாறான சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
« PREV
NEXT »