Latest News

April 11, 2015

சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
by admin - 0

சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
 கைது
சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


போலி ஜெர்மன் கடவுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தி சிங்கப்பூர் வழியாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் வவுனியா மாங்குளத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த நபர் கடந்த 8ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். 308 ரக விமானத்தின் ஊடாக சிங்கப்பூர் சென்றிருந்தார். இதற்காக சட்ட ரீதியான கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார்.சிங்கப்பூர் சென்றதும் போலி ஜெர்மன் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி அங்கிருந்து பிரான்ஸிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.


போலி ஆவணங்களைத் தயாரித்து பிரான்ஸ் அனுப்பி வைக்க பத்து லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »