திருநாவுக்கரசு கிருஸ்ணகுமார்
பிறப்பு : 21 ஒக்ரோபர் 1966 — இறப்பு : 10 ஏப்ரல் 2015
யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் விசாகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கிருஷ்ணகுமார் அவர்கள் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூமணி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
கலாஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, கிரிஜா, மதுஷா, கிஷாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏகநாயகி, காலஞ்சென்ற இந்திராணி, பாக்கியலட்சுமி, ரதிதேவி, திருவருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராசா, குணராசா, சிறி, புஸ்பராசா, புவனேந்திரராசா, காலஞ்சென்ற பேரம்பலம், சிவகுருநாதன், தேவராசா, சைன்ராசன், செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
இலங்கை
Social Buttons