Latest News

April 22, 2015

வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி முழு ஆதரவு!
by admin - 0

வடமராட்சி கிழக்கில் அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் நாளை புதன்கிழமை(22-04-2015) நடாத்தும் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடி;கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது. 

மேற்படி போராட்டத்தை அரசாங்கம் தனது கையாட்கள் மூலம் குழப்பும் வகையிலான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. மேற்படி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அந்த அரச ஆதரவு சக்திகளால் பொது மக்களை நோக்கி கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அரச ஆதரவு சக்திகளின் பொய்ப்பிரசாரங்களை பொருட்படுத்தாது வடமராட்சி கிழக்கு மக்களின் பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டுவர அணிதிரளுவது அனைவரதும் கடமையாகும்.

செ.கஜேந்திரன்


« PREV
NEXT »

No comments