இக்கொலைக்கு விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த ரவுடி முத்தமிழ்செல்வம் (எ) பத்தர்செல்வம் (33) என்பவர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அறிவழகன், பத்தர்செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்கிடையே வேறொரு கொலை வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அறிவழகன் அடைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், பத்தர்செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். செல்வத்தின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்ததில் நகராட்சி பூங்காவுக்கு தினமும் வருவது தெரிந்தது.
இதனால், அங்கேயே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று காலை பூங்காவுக்கு தனது கூட்டாளிகளுடன் அறிவழகன் வந்து மறைந்திருந்துள்ளார். அப்போது 6.45 மணியளவில் பூங்காவுக்குள் பத்தர்செல்வம் நுழைந்த உடனே, அறிவழகன் கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு காலில் வெட்டினர்.
பின்னர், பத்தர்செல்வத்தின் தலையை ஒரே துண்டாக வீச்சரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். சிறிதுநேரத்தில் கூட்டாளிகள் தப்பியோடிவிட்டனர்.
ஆனால் அறிவழகன் மட்டும் துண்டான தலையை கையில் எடுத்துக்கொண்டும், மற்றொரு கையில் வீச்சரிவாளுடனும் நடந்து சாலையில் சென்றார். இதனை பார்த்தபொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் அங்குள்ள காந்திசிலை முன்பு செல்வத்தின் தலையை போட்டுவிட்டு நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
ஆனால் அறிவழகன் மட்டும் துண்டான தலையை கையில் எடுத்துக்கொண்டும், மற்றொரு கையில் வீச்சரிவாளுடனும் நடந்து சாலையில் சென்றார். இதனை பார்த்தபொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் அங்குள்ள காந்திசிலை முன்பு செல்வத்தின் தலையை போட்டுவிட்டு நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
உடல் முழுவதும் ரத்தமாக இருந்ததால் அறிவழகனை பார்த்த போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். கொலை நடந்த இடத்துக்கு எஸ்பி நரேந்திரநாயர், டிஎஸ்பி சீத்தாராமன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
தலை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்ததும் செல்வத்தின் மனைவி, நகர போலீசில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில், அறிவழகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அறிவழகனை கைது செய்து மற்றவர்களை பிடிக்க தனிப்படையை அமைத்துள்ளனர் கொலையான செல்வம் மீது 2 கொலை உள்பட 7 வழக்குகளும் உள்ளன. அறிவழகன் மீது 4 கொலை வழக்கு 17 வழக்குகள் உள்ளது. -
No comments
Post a Comment