லண்டனில் உள்ள மெற்றோ பொலிடன் பொலிசார் , அரவிந்தன் ரவீந்தர் என்னும் தமிழ் இளைஞர் ஒருவரை வலைவீசி தேடிவருவதாக பிரித்தானிய மெற்றோ பொலிடன் பொலிசின் , சி.ஐ.டி பிரிவினர் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள். கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய இவரை பொலிசார் கைதுசெய்ய முற்பட்டவேளை இவர் தப்பிவிட்டார். மேற்படி இவர் தலைமறைவாகியும் உள்ளார். 5 அடி 3 அங்குலம் உயரம் உள்ள இவர் கைகளில் ஒரு வெட்டிக் காயம் இருக்கிறது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பல தமிழர்களின் வீட்டில் கொள்ளையடித்த சந்தேக நபர் இவர் என்று , மேட்டன் பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள். மிச்சம் , ரூட்டிங் மற்றும் மேட்டன் பகுதிகளில் இவரை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளார்கள். இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் , பொலிசாரை உடனே இந்த இலக்கத்தில் 0800 555 111 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி இனியும் தமிழர்கள் வீட்டில் திருட்டுகள் நடக்காமல் இருக்க இவர் கைதுசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தகவல் தருபவர்களின் ,தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பொலிசார் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
நன்றி அதிர்வு
No comments
Post a Comment