அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவையில்லை என்பது தொடர்பில் தான் நீதிமன்றில் ஆஜராகி வாதாடவுள்ளதாக' கூறினார். அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons