Latest News

April 01, 2015

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
by Unknown - 0


கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த பாரியளவான கஞ்சா தொகையானது, வவுனியா விசேட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(31) கைப்பற்றப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். விசேட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை(31) மாலை கிளாலியிலுள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.  

கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என பளைப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

« PREV
NEXT »