ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கான பொறிமுறையாக, பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததோடு அதற்கான செயற்பூர்வ முனைப்பிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாடுகடந்த அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களில் ஒருவராகவுள்ள வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் :
இலங்கைத்தீவில் போர் ஓயந்த்து வருடங்கள் சில கழிந்த பின்னரும் ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்துவதற்கு கட்டாயம் சர்வதேச விசாரணையும், பொதுசன வாக்கெடுப்பும் வேண்டும்.
இன அழிப்பென்பது போர் ஆயுதங்களால் மட்டும் மேற்கொள்ளப்படுவது இல்லை. அது பல்வேறு முறைகளிலும் நிகழத்தப்படுகின்றது.
போரில் ஈவிரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த பின்பும், இன்றும் தமிழர் பகுதிகளில் அவர்களின் காணி, உணவு ,மருந்து உரிய வேலைவாய்ப்பு என்பனவற்றை மட்டுப்படுத்தி தொடர்ந்தும் ஒரு மெதுமுறையான இன அழிப்பு செயலாய் மாற்றி அமைத்துள்ளனர்.
சிறிலங்காவின் அரச கட்டமைப்பில் அரசாங்கம் மாறியிருக்கின்றதே தவிர அதன் கட்டமைப்புகளில் மாற்மேற்படவில்லை. இறுதி யுத்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவே ஆகும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தாடல் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்த பிரித்தானியாவின் நிழல் அமைச்சர் Stephen Timms அவர்கள் , இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்குரிய சர்வதேச விசாரணைக்கு தமது தொழிலாளர் கட்சி முழு ஆதரவினையும் அதற்கான குரலினை தொடர்ந்து எழுப்பும் எனவும் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தாடல் நிகழ்வில் மங்கள விளக்கினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ மற்றும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்.பாலாம்பிகை முருகதாஸ் ஆகியோர் ஏற்றிவைத்திருந்தனர். நா. தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகர் தில்லை நடராஜா அவர்கள் தலைமை தாங்கியிருக்க, நன்றியுரையினை அரசவைப் பிரதிநிதி ஆறுமுகம் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
No comments
Post a Comment