பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹபீஸ் தனது கன்னி இரட்டைச் சதத்தை இன்றைய தினம் பதிவு செய்தார். இவர் 332 பந்துகளில் 224 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட்டுக்களை இழந்து 417 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக பங்களாதேஷ் அணி தனது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
No comments
Post a Comment