வடமாகாண சபையில் ஆளும் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட 8 பிரேரணைகளில் 3 பிரேரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்றைய அமர்வில் வடமாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களினால் 8 பிரேரரணைகள் முன்வைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன் வைக்கப்பட்ட 3 பிரேரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த வருடம் ஏழாம் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரின் பின்னர், ஒத்திவைக்கபட்ட 3 பிரேரணைகளையும் நிறைவேற்றுவது பொருத்தமானதாக அமையும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வடமாகாணத்தின் நான்கு அமைச்சுக்களினூடாக வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட வேண்டும் என வடமாகண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
No comments
Post a Comment