இந்தாண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமான சூழலில் பணியாற்றவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த சூழ்நிலை இந்த புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் இல்லை என்றும் தெரிவித்துள்ள சுமந்திரன்,
சுமத்திரன் தற்பொழுது எங்கே இருக்கிறார் அவர் யாழில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட உயிர் அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லையா? அனைத்து ஊடகங்களிலும் ஸ்ரீலங்கா காவல்துறையால் கொலை முயற்சிக்கு உள்ளான 3 ஊடகவியாளர்கள் பற்றிய செய்திகள் இவரின் கண்ணுக்கு தெரியவில்லையா? இவர் என்ன மைத்திரி அரசின் ஊடக பேச்சாளர் போல கருத்து தெரிவிக்கிறார்.
கிழக்கு மாகாண சபை பற்றியும் கருத்துவெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் ,முஸ்லிம் மக்களிடையே பிரிவினைவாதம் ஏற்படக் கூடாது என்பதனைக்கருத்தில் கொண்டே முதலமைச்சருக்கான வாய்ப்பை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணசபை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொண்டு வந்து நிறைவேற்றிய இனப்படுகொலை தொடரபான தீர்மானம் பற்றி தனக்கும் மாவைசேனாதிராஜாவிற்கும்,கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இவருக்கும் மற்றும் சம்பந்தனுக்கு தெரிய வந்திருந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இனஅழிப்பு தீர்மானம் வடக்கு மாகாணத்தில் நிறைவேற்ற விட்டிருக்கமாட்டார்கள் என்று அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும் இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் நிலையினை குறிப்பிடும் சுமந்திரன் வடமாகாண சபையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதில்லையா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.?
1 comment
சுமத்திரன் திருந்தா ஜென்மம்
Post a Comment