இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் பல மந்தகதியில் முன்னெடுக்கப்படு வதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
தெற்காசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
தெற்காசிய பொருளாதார மீதான கவனம் என்ற அறிக்கையை உலக வங்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் அதிகரித்துள்ள செலவிடப்படும் வருமானம் போன்றவை இந்த நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும், பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவாகவிருந்த கடந்தகால முதலீடுகளை புதிய அரசாங்கம் மீளாய்வுசெய்ய ஆரம்பித்திருப்பதால் போட்டித்தன்மை தொடர்ந்தும் சவாலாக இருப்பதாகவும் உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தெற்காசிய நாடுகளில் மிகவும் குறைந் தளவு முதலீடுகளையே இலங்கை பெற்றிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேநேரம், 2015ஆம் ஆண்டு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்திருப்பதுடன், 2017ஆம் ஆண்டு இதன் வளர்ச்சியானது 7.6 வீதமாக அதிகரிக்கும் என்றும், அதிகரித்திருக்கும் முதலீடுகள் மற்றும் பலமான நுகர்வுகள் மூலம் இந்த நிலைமை காணப்படுவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment