Latest News

April 23, 2015

100 நாளில் நாடு அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குள்-மொஹமட் முஸ்ஸாமில்
by Unknown - 0

நாடு 100 நாட்களுக்கு ஸ்திரமற்ற நிலைமைக்குள் சென்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு அந்த கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.

இன்றுடன் இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைகிறது. 100 நாளில் நாட்டுக்கு என்ன உரித்தாகியுள்ளது.

100 நாள் ஆரம்பிக்கும் போது நாட்டின் ஸ்திரமான அரசியல் நிலைமை காணப்பட்டது. தற்போது நாடு ஸ்திரமற்ற அரசியல் நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரமும் பாரதூரமான வகையில் சரிந்துள்ளது. சமூகத்தின் சகல துறைகளிலும் பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜனநாயகம் புறந்தள்ளப்பட்டு அரசியல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பமாகியது.

தோல்வியடைந்த அரசியல் சக்தியை அப்பா இறந்து விட்டார் என கூறி புதைக்க முயற்சித்தனர். எனினும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் சக்திகள் அரசியல் வேட்டையை எதிர்த்து நிற்க முடிந்தது.

100 நாள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், அதற்கு எதிராக முழு நாட்டையும் விழிப்படைய செய்ய முடிந்தது.

அடுத்த பொதுத் தேர்தலில் மிகவும் தீர்மானகரமான வகையில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் ரணில் விக்ரமசிங்கவும் இந்த தேர்தலில் போட்டியிட நேர்ந்துள்ளது. அடுத்த தேர்தலில் எவ்வித போட்டியும் இன்றி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கொண்டு வரும் தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்து கொடுக்கும் வேலைத்திட்டம் இந்த 100 நாள் திட்டத்தில் இருந்தது.

எனினும் 100 நாள் முடியும் போது ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் கனவை நாட்டின் தேசப்பற்றுள்ள சக்திகள் மற்றும் தேசியவாத சக்திகளால் கலைக்க முடிந்துள்ளது.

இதனால், அடிவாங்கிய பாம்பு போல் கோபத்தில் இருக்கும் 100 நாள் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை மிகவும் கொடூரமான முறையில் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

எதிர்க்கட்சியை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூக்கம் விழித்து போராட்டங்களை நடத்த நேர்ந்துள்ளது. இலஞ்ச ஆணைக்குழு வேட்டை மாளிகையாக மாறியுள்ளதன் காரணமாவே இந்த போராட்டத்தை நடத்த நேர்ந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயரை கெடுக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் நற்பெயரையும் இந்த அரசாங்கம் கெடுத்து வருகிறது. அரசியல் வேட்டையாடலே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. நாட்டை நேசிக்கும் மக்கள் ஒபோதும் இதனை அங்கீகரிக்க மாட்டார்கள் எனவும் மொஹமட் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments