இலண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கல் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காரவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா (Asian Awards) நேற்று (17) இலண்டனிலுள்ள Grosvenor House ஹோட்டலில் இடம்பெற்றது.
இவ்விழாவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்கார, விளையாட்டுத்துறைக்கு சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருது ( Outstanding Contribution to Sport) வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருதினை 2011ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment