பிரபல தொழிலதிபர் சிவசரணம் குகநாதன் (வயது 56) நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
ஜி.ரி.வி. என்ரர் பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், மகாராஜா புட் புரொடக்ட் பிரைவேட் லிமி டெட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான குகநாதன் சிறந்த சமூக சேவையாளரும் நலிந்த வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாரிய பங்களிப்பினை வழங்கியருமாவார்.
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குகநாதன் சுகவீனம் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment