பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பதவியை பெறுவதற்கு, தென்கொரியாவின் தொழில் அதிபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கொரியா ரைம்ஸ்" என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கொரியாவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச வர்த்த நிறுவனம் ஒன்றின் தலைரான சங் வோன் ஜொங், மகிந்தராஜபக்ஷவுடன் கொண்டிருந்த நட்பை பயன்படுத்தியே, பான் கீ மூனை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக நியமனம் பெற உதவியுள்ளார்.
2006ம் ஆண்டு பான் கீ மூன் பொது செயலாளர் பதவிக்கு தெரிவானார். ஆனால் இதற்காக பாதுகாப்பு சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது பான் கீ மூனுக்கு அதிக போட்டி காணப்பட்டது.
இந்த காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜயந்த தனபாலவுக்கே ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. ஆனால் மகிந்தவுடனான நட்பை பயன்படுத்திய குறித்த தொழிலதிபர், ஜயந்த ஜனபாலவை பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்க செய்துள்ளார்.
அதன்படி மகிந்தவின் கோரிக்கை அடிப்படையில் ஜயந்த தனபால ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் போட்டியில் இருந்து விலகியதுடன், பான் கீ மூனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனை அடுத்தே பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக தெரிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபர் சங் வோங்-ஜொங்கிங்கு பல சந்தர்ப்பங்களில் பான் கீ மூன் பிரதியுபகாரம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தொழில் அதிபர் மீதாக மோசடி குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment