குமார் சங்கக்கார மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கோரியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்க நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழு இன்று காலை தமது பொறுப்புகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தது.
சிதத் வெத்தமுனி தலைமையிலான இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில் 9 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இதன்போது, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்ததாவது.
இது எமது தேசிய, சுயாதீன, அடிமையற்ற அரசாங்கம். எமது விளையாட்டுத்துறை சட்டத்தை நடைமுறைப்படுத்த எமக்கு சுதந்திரம் உள்ளது.
கிரிக்கெட் நிர்வாக சபையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்குமானால் அதனை கண்டறிவதற்காகவே இந்த இடைக்கால நிர்வாகக் குழுவை நாம் நியமித்துள்ளோம். மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்காரவும் சில இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில், குமார் சங்கக்காரவை இன்னும் ஓராண்டு தாய்நாட்டுக்காக விளையாடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
என்றார்.
Social Buttons