Latest News

April 01, 2015

தலாய் லாமா இலங்கை வர அனுமதி மறுப்பு- சீனாவைத் திருப்திப்படுத்த முயற்சி!
by Unknown - 0


திபெத்தின் பௌத்த தலைவரான தலைலாமாவுக்கு இலங்கைக்கு வருவதற்கான வீசாவை வழங்காமலிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. சீனாவுடான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருமாறு கொழும்பிலுள்ள மஹாபோதி சங்கம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மெற்கொண்டுள்ளது. மஹாபோதியின் இந்த அழைப்பு இலங்கை அரசுக்குப் பெரும் சங்கடமான நிலையைக் கொடுத்திருந்த நிலையில், இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருக்கின்றது.

அவருக்கு இலங்கை வருவதற்கான வீசா வழங்கப்படுமாகவிருந்தால் சீனா மற்றும் இலங்கைக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற காரணத்தினாலே அரசாங்கம் இத்தகைய தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
« PREV
NEXT »