கார் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக, நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கி் நாளை தீர்ப்பு தேதியை அறிவிக்கவுள்ளது மும்பை கோர்ட். ஜெயலலிதா வழக்குக்குப் போட்டியாக, கடந்த 13 வருடமாக இந்த வழக்கு இழுத்தடித்துக் கொண்டுள்ளது. சமீபத்தில்தான் இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தன. இதையடுத்து நாளை தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக நீதிபதி தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனது இறுதி வாதத்தை முன்வைக்க கூடுதல் அவகாசம் தேவை என்று சல்மான் கானின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, திங்கள்கிழமை நான் தீர்ப்பு தேதியை அறிவிக்கவுள்ளேன். அதற்குள் வாதத்தை முடியுங்கள் என்று கூறி விட்டார். கடந்த 2002ம் ஆண்டு பந்த்ரா பகுதியில் நள்ளிரவில் படு வேகமாக வந்த சல்மான் கானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சல்மான் கான் மீது வழக்குத் தொடரப்பட்டது. விபத்து நடந்த சமயம், சல்மான் நல்ல குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 27 சாட்சிகளை அரசுத் தரப்பு விசாரித்துள்ளது. சல்மான் கான் தரப்பில் அவரது கார் டிரைவர் அசோக் சிங் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் சல்மா்ன் கான் மீது கடுமையான குற்றப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், குற்றவாளி என்ற அவர் அறிவிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment