Latest News

April 27, 2015

கொடகெதன மர்மம்! பெண்கள் நிர்வாணமாகக் குளிப்பது உண்மையா?
by admin - 0


காவத்தை, கொடகெதன கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோருக்கு ‘அடுத்தது உன் மனைவியை தயாராக வைத்துக்கொள்’ என அச்சுறுத்தல் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அத்தகைய அச்சுறுத்தலை விடுக்கும் நபரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் திகில் கிராம மாக கொடகெதன தற்காலத்தில் அறியப்படுகின்றது.

இக் கொலைகள் இன்று, நேற்றல்ல 2008 ஆம் ஆண்டு , ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அன்று முதல் அப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொலைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

அண்மையில் கான்தி என்ற பெண் தனது மகனாலேயே கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பிரதேசத்திலேயே இடம்பெற்றது.கொடகெதன கசிப்பு வியாபாரிகளாலேயே ஆரம்பத்தில் வீணாகத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்தின் பிரதான பிக்குவே இத்தகவலை வெளியிட்டுள்ளார். “கொடகெதன அழகாக இருந்த ஒரு பிரதேசம் இது கசிப்பு வியாபாரிகளாலேயே ஆரம்பத்தில் வீணாகத் தொடங்கியது. இங்கு இருக்கும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை.

இங்கு புத்திசாலிகளும் , நல்ல வியாபாரிகளும் இருக்கவே செய்கின்றனர். இந்த கிராமத்தை நாசமாக்கும் குடும்பங்கள் சில இருகின்றன. அவர்கள் முழுக் கிராமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்” என்றார் அப் பிக்கு.

இதுதவிர கொடகெதன பாடசாலைக்கு வெளியிடங்களில் இருந்து ஆசிரியர்கள் வர பயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைகள் வெவ்வேறு நபர்களால் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் கொலைகள் ஒரே விதமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொடகெதன ஆற்றில் பெண்கள் நிர்வாணமாக குளிப்பதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானதென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தின் நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்க முன்வந்துள்ள பெண்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

“கிராமத்தில் பெண்கள் யாரும் சுதந்திரமாக வெளியே நடமாட முடிவதில்லை. இரவில் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் ஒன்றாக உறங்குகின்றோம், எங்கள் பிள்ளைகளுக்கு வெளியூரில் உள்ளோர் பெண் கொடுக்க பயப்படுகின்றனர். இரவானாலே பயமும் , பீதியும் எங்களை தொற்றிக்கொள்கின்றது” என்றனர்.

மேலும், ” எங்களைக் கொன்றால் கூட பரவாயில்லை, உடலில் ஒரு நூல் கூட இல்லாமல் நிர்வாணப்படுத்தி விடுகின்றனர் அதை நினைக்கும் போதே பயமாக உள்ளது ” என கவலையும் , பீதியும் கலந்த தொனியில் தெரிவிக்கின்றனர்.



« PREV
NEXT »

No comments