தமிழக கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியினை சந்திக்க டெல்லி சென்ற தேமுதிக கட்சித் தலைவர் செய்தியாளார்கள் சந்திப்பில் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் மற்ற தலைவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனராம். மேக்கேதாட்டு, செம்மரக்கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் ஜெயா டிவி நிருபர் கேட்ட கேள்விகளால் ஆத்திரமடைந்து மைக்கைத் தூக்கி அடிக்கும் நிலைக்குச் சென்றார்.
அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால் அவருடன் சென்ற திருச்சி சிவா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிருப்தியில் ஆழ்ந்தனர். மேலும், அச்சந்திப்பிலிருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேறினார். கருணாநிதி முதல் திருமாவளவன் வரை நேற்று படு சுறுசுறுப்பாக அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் போய்ப் பார்த்து பேசி அவர்களை ஒரே லைனில் கொண்டு வந்த விஜயகாந்த் மீது நேற்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. புதிய பரபரப்பும் ஏற்பட்டது. அவரது செல்வாக்கு திடீரென உயர்ந்தது போலவும் தோன்றியது.
இந்நிலையில் அதை அப்படியே போட்டு உடைக்கும் வகையில் இன்று விஜயகாந்த் வழக்கம் போல கோபாவேசமாக பேசி அநாகரீகாக நடந்த சம்பவத்தைப் பார்த்தால், அவரது கோபத்தைத் தூண்டி அவரது விரலைக் கொண்டே அவரது கண்ணைக் குத்தும் திட்டமிட்டே இந்தக் கேள்வித் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.
No comments
Post a Comment