ஆனால் பிளாக்பெர்ரி போனுக்குள் ஹேக் செய்து இதை ரஷ்ய ஹேக்கர்கள் பார்க்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. ஒபாமா பயன்படுத்தும் பிளாக்பெர்ரி போனானானது மிகவும் பாதுகாப்பானது.
அவ்வளவு சீக்கிரமாக அதை ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பானதாகும். எனவே இந்த போனை ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியவில்லை. மாறாக, வெள்ளை மாளிகையில் உள்ள சிலரின் மெயில்களை ஹேக் செய்து உள்ளே போயுள்ளனர். ஒபாமாவுடன் ரெகுலராக தொடர்பில் உள்ளவர்கள் இவர்கள். அந்த மெயில்கள் மூலமாக ஒபாமாவின் மெயில்களுக்குச் சென்று படித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாம்.
ஒபாமாவின் இமெயில் முகவரியை நேரடியாக ஹேக்கர்கள் ஹேக் செய்யவில்லை என்றும் தெரிய வந்து உள்ளது. இந்த ஹேக்கர்கள் பார்த்த செய்திகள் எல்லாம் கிளாசிபைட் செய்யாதவை என்றும் தெரிய வந்துள்ளது. சாதாரண மெயில்கள்தான் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக அவர் அனுப்பும் சில மெயில்களும், அவருக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சி நிரல், தலைவர்கள், அதிகாரிகளுடனான சந்திப்பு குறித்த மெயில்கள் மட்டுமே அதில் ஹேக் செய்யப்பட்டவையாகும். மிக முக்கியமான கிளாசிபைட் தகவல்களை மெயில்கள் மூலமாக அனுப்ப மாட்டார்களாம். எனவே அவை எதுவும் லீக் ஆகவில்லை என்று கூறுகிறார்கள். இருந்தாலும் அதிபரின் மெயில் வேறு சிலரால் படிக்கப்பட்டு விட்டதே கூட பாதுகாப்பு குறைபாடுதான் என்று அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் அனுப்பிய, அவருக்கு வந்த மெயில்களை அடையாளம் தெரியாத சில ஹேக்கர்கள் படித்துப் பார்த்துள்ளனர் என்பதே அமெரிக்க அரசுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.
ஹேக்கர்கள் இதுபோல குறுக்கு வழுியில் போய் அதிபரின் மெயில்களைப் படிப்பார்கள் என்று அமெரிக்க அரசு நினைத்துக் கூட பார்க்கவில்லையாம். இதுதொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறதாம். சீனாவைப் போலவே ரஷ்யாவிலும் நிறைய கிரிமினல் ஹேக்கர்கள் உள்ளனர். ஸ்னோடன் சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்கா மீது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கோபம் அதிகமாகி விட்டது. இதனால் இரு நாட்டு ஹேக்கர்களும் அமெரிக்கர்களைக் குறி வைத்து தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். அமெரிக்க நிறுவன கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ய சீனத் தரப்பில் பலரும் முயன்று வருகின்றனர். அதேபோலத்தான் ரஷ்யாவிலும் பலர் ஹேக்கிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் உக்ரைன் விவகாரத்திற்குப் பின்னர் இது அதிகரித்து விட்டது. அமெரிக்க அதிபரின் மெயிலைப் போலவே, பென்டகன் கம்ப்யூட்டர்களையும் ஹேக் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எனவே அவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது மெயில் அனுப்பும் பழக்கத்தை அவர் சற்று கைவிட்டிருந்தார். இதனால் புஷ் காலத்தில் இமெயில் அனுப்பும் பழக்கம் அதிபரிடம் குறைந்திருந்தது. ஆனால் அவரது சகோதரியின் மெயில் ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு கூடியது. இந்த நிலையில் தற்போது ஒபாமாவின் மெயிலை ரஷ்ய ஹேக்கர்கள் பிரித்து பார்த்து பரபரப்பை அதிகமாக்கி விட்டனர்.
No comments
Post a Comment