கடந்த மார்ச் 18-ஆம் தேதி சிரியா எல்லை அருகே உள்ள நினேவா மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். த முகாம்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ஆதரவு நாடுகளின் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அமெரிக்க தரப்பில், தாக்குதல் சம்பவத்தின்போது அவர் அங்கு இருந்திருக்க வாய்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்தாதி உயிரிழந்துவிட்டதாக ரேடியோ இரான் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர். 2010-ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார்.
No comments
Post a Comment