தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை யொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்.பி தெரிவாகும்.
238 எம்.பிக்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனை யொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதி த்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,
தற்பொழுதுள்ள 160 தேர்தல் தொகுதியை 13 பல் தொகுதிகள் அடங்கலாக 213 ஆக அதிகரிக்கவும் 65 உறுப்பினர்களை மாவட்ட அடிப்படையிலும் தேசியபட்டியல் மூலமும் தெரிவு செய்யவும் கூடிய புதிய முறையொன்றை ரத்ன தேரர் முன்வைத்திருந்தார். இதற்கு தேசிய நிறைவேற்று சபையிலுள்ள அநேக கட்சிகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. இதனூடாக, மாவட்ட ரீதியில் அன்றி ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஒரு எம். பி தெரிவு செய்யப்படுவார்.
இதேவேளை, 165 பேர் தொகுதிவாரி மூலமும் 66 பேர் மாவட்ட விகிதாசார முறையிலும் 24 பேர் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவாகும் கலப்பு முறைக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. சுதந்திரக் கட்சியும் இந்த முறைக்கு இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த இரு முறைகளில் உகந்த முறையொன்றை சகல தரப்பினருடனும் பேசி புதிய சட்டமூலமாக முன்வைக்க இருக்கிறோம்.
விருப்பு வாக்குகளற்ற இலகுவான தேர்தல் மறுசீரமைப்பு முறையொன்றை விரைவில் முன்னெடுக்க இருக்கிறோம்.
எதிர்வரும் 28 ஆம் திகதி 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற உத்தேசித்திருக் கிறோம். பின்னர் முன் வைக்கப்பட்ட திருத்தங்களின்றி உச்சநீதிமன்றம் அனுமதித்த விடயங்கள் உள்ளடக்கிய புதிய சட்டமூலமே தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தை எதிர்ப்பது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும். எவ்வாறாவது இதனை நிறைவேற்ற இருக்கிறோம். 20 ஆவது திருத்தத்தை இதனுடன் சேர்த்தே அல்லது அது குறித்த சட்ட ரீதியான உறுதியை வழங் கியோ நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.
இது குறித்து சு. க வுடன் ஆராயப்பட் டுள்ளது. நியாயமான காரணமின்றி எவருக்கும் இதிலிருந்து நழுவ முடியாது.
20 ஆவது திருத்தம் குறித்து மக்களதும் அபிப்பிராயம் பெறப்படும். சகல இன பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படும் வகையில் புதிய மறுசீரமைப்பு அமையும்.
நிறைவேற்று சபையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்பு முறையின் படி, தேர்தல் தொகுதிகள் அதே அளவாக இருக்கும். பல் தொகுதிகள் முன்பிருந்தது போல மீண்டும் ஸ்தாபிக்கப்படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளின் அளவுக்கு எம்.பிக்கள் தொகையை அதிகரிக்கவும் ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறு அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments
Post a Comment