Latest News

April 23, 2015

நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி கலைப்பு?
by Unknown - 0

நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் இடம்பெற்ற தேசிய நிறைவேற்றுச் சபையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜூன் மாத இறுதி வாரத்தில் பொதுத் தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.

அதேபோன்று நடப்பு விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தலையும் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களைப் போல இத்தேர்தலில் விருப்பு வாக்கு முறைமை இருக்காது என்றும் மனோ கணேசன் கூறினார்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் முடிவுகள் கணக்கிடப்படும் முறையின் அடிப்படையிலே கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு நியமிக்கும். இந்த விதிமுறைகளின் கீழ் தேர்தல் நடைபெறும். 

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்பேது 225 ஆக இருப்பதுடன் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கையை மேலும் 10ஆக அதிகரிக்கவும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments