Latest News

April 27, 2015

துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய நாமலின் மெய்பாதுகாவலர் கைது: மைத்திரி மீது தாக்குதல் நடத்த திட்டமா? என விசாரணை
by admin - 0


அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரியான இராணுவ கோப்ரல் ஒருவர் துப்பாக்கியை ஒன்றை மறைத்து எடுத்துச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி எப்படி துப்பாக்கியுடன் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் எவரும் துப்பாக்கியுடன் பிரவேசிக்க முடியாது என்பதுடன் அது பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்படும். 

இராணுவ கோப்ரல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் அவதானித்துள்ளார். எனினும் அதற்கிடையில் கோப்ரல் ஜனாதிபதிக்கு அருகில் சென்றிருந்தார். 

ஜனாதிபதி ஒருவர் வைபவம் ஒன்றில் கலந்து கொள்ளும் போது பிரதமரின் பாதுகாப்பு பிரிவு மற்றும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு என்பன நீக்கப்பட்டு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும். 

பிரதேச பொலிஸாரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கட்டளைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

« PREV
NEXT »

No comments