ஜனாதிபதி அல்லது பாராளுமன்றில் உள்ள மக்கள் பிரதிநிதி மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதானால் அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு இருக்க வேண்டும். இந்த குழு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சிப்பது ஜனாதிபதி நம்பிக்கை மோசடி செய்தமைக்காக அல்ல.
மே மாதம் பாராளுமன்றை கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு முயற்சிக்கின்றனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் இக்குழு மேலும் அநாதையாகி விடும் என்பதோடு அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். 2016ம் ஆண்டுவரை இந்த பாராளுமன்றை கொண்டு செல்ல அவர்கள் விரும்புகின்றனர். அதன்மூலம் மஹிந்தவை நாடு முழுவதும் கொண்டுசென்று அவர் தோள் மீது ஏறி மூன்று அல்லது நான்கு பாராளுமன்ற ஆசனங்களை பெறுவதே இவர்களின் இலக்கு.
எனினும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களது கையொப்பத்தை பெற்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் முன்வைத்தால் பாராளுமன்றை கலைப்பதற்கு உள்ள அதிகாரம் ஜனாதிபதிக்கு அற்றுப்போகும். அதன்மூலம் 2016 வரை தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்ள இந்த மஹிந்தவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
No comments
Post a Comment